விபத்தில் சிக்கிய வீரவங்சவின் மனைவி

Report Print Steephen Steephen in அறிக்கை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச பயணித்த ஜீப் வண்டி ஒன்று நேற்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

சிலாபம் நாத்தாண்டிய - தங்கொடுவ வீதியின் மாவத்தகம பிரதேசத்தில் இந்த விபத்து நேற்று மாலை 6 மணிக்கு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீரவங்சவின் உறவினரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் தினேஷ் பெரேரா உட்பட உறவினர்கள் சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த ஜீப் வண்டி குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு பிரவேசித்த வாகனம் ஒன்றுடன் மோதியுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இரண்டு தரப்பினரும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக நாத்தாண்டிய பொலிஸார் கூறியுள்ளனர்.