இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய இளைஞர்கள்! சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in அறிக்கை

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் உயிரிழந்த பிரித்தானிய ரக்பி விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

கடந்த 13ஆம் திகதி கொழும்பில் தங்கியிருந்த வீரர்களுக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

lems Pirates RFC அணியை சேர்ந்த இரண்டு வீரர்களும் கடந்த சனிக்கிழமை கொழும்பில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளனர்.

அதன் பின்னர் ஏற்பட்ட உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் Howard என்ற 25 வயதுடைய வீரர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் 26 வயதான Baty என்பவரும் உயிரிழந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வீரர்களும் தங்கள் அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடு வீரர்கள் என ரக்பி அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த மரணத்தை தாங்கி கொள்ள முடியவில்லை என பிரித்தானிய ரக்பி அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இலங்கை பொலிஸ் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட சர்வதேச ஊடகங்கள் மரணம் தொடர்பில் கேள்விகளை எழுப்பி வருகின்றன.

இரு வீரர்களின் மரணம் தொடர்பில் இதுவரை சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டவில்லை. மரணத்தில் பல மர்மங்கள் உள்ளதாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.