துயர் மிகுந்த நாளில் முள்ளிவாய்க்காலில் அட்டகாசம் செய்யும் இராணுவத்தினர்

Report Print Vethu Vethu in அறிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் துயர்மிகுந்த இந்நாளில் இராணுவத்தினரின் செயற்பாடு குறித்து தாயக மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மே 18 திகதியான இன்று உலகமெங்கும் தமிழின துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

ஆயுத போர் மூர்ச்சையான முள்ளிவாய்க்காலில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகிறது.

தமது உறவுகளை இழந்தவர்கள் அந்த இடத்திற்கு சென்று கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.

எனினும் இன்றையநாளில் தமது வெற்றிக் கொண்டாட்டத்தை தமிழர்கள் மீது திணிக்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இறுதி யுத்ததத்தில் பலியான தனது உறவுகளுக்கு அக வணக்கம் செலுத்திவிட்டு வேதனையுடன் திரும்பிய உறவுகளுக்கு இராணுவத்தினர் குளிர்பானங்களையும் சிற்றூண்டிகளையும் வழங்கியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பிரதான பாதையில் கூடாரம் அமைத்துள்ள இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக உணவுகளையும், பானங்கயும் வழங்கி வருகின்றனர்.

துயர்மிகுந்த இந்நாளில் இராணுவத்தினரி் அடாவடித்தனமான செயற்பாடு இன்னும் தம்மை காயப்படுத்துவதாக தாயக மக்கள் கூறுகின்றனர்.

இராணுவத்தினரின் மிரட்டலுக்கு அஞ்சிய மக்கள், அவர்கள் வழங்கும் உணவுகளையும் பானங்களை வாங்கி செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.