மஹிந்தவை கவலையில் ஆழ்த்திய நாமல்!

Report Print Vethu Vethu in அறிக்கை

தனது மகனின் செயற்பாடு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மஹிந்தவின் இல்லத்தில் நடைபெற்ற விருந்து ஒன்றின் போது, தனது கவலையை மஹிந்த வெளிப்படுத்தியுள்ளது.

மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் விருத்து உபசாரம் ஒன்று நடைபெற்றது. விருத்தினை நாமல் ராஜபக்ச, யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்தனர்.

மஹிந்த ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்சவின் திருமண நாளை முன்னிட்டு இந்த விருந்து நடத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய கேக் வெட்டிய மஹிந்த மற்றும் ஷிரந்தி 3 மகன்களுக்கு முதலில் கேக் ஊட்டியுள்ளனர்.

நிகழ்வில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களான ஜீ.எல் பீரிஸ், வாசுதேவ, பவித்ரா உட்பட குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது நாமலுக்கும் தற்போது வயதாகி விட்டது. திருமணம் எப்போது என பவித்ரா கேட்டுள்ளார். எனினும் பதில் அளிக்காமல் நாமல் நழுவிச் சென்றுள்ளார்.

இதனை பார்த்த மஹிந்த, நான் நாமலின் திருமணம் குறித்து பேசுவதனை நிறுத்தி விட்டேன் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.