கொழும்பில் ஏற்படவுள்ள மற்றுமொரு மாற்றம்!

Report Print Aasim in அறிக்கை
290Shares

கொழும்பு பேரைவாவியின் சுற்றுப் புறத்தை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

பேரைவாவியின் கரையோரப் பகுதியை கல்லணைத்தடுப்பு மூலம் பாதுகாப்பதுடன் அதனை அண்டிய பிரதேசங்களை சுற்றுலா மையங்களாக மாற்றியமைப்பது இதன் உத்தேச இலக்காகும்.

அத்துடன் பேரைவாவியின் சுற்றுப்புறத்தில் பொதுமக்கள் பூங்கா ஒன்றை அமைத்தல், சுற்றுலா மையத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் என்பனவும் இந்த உத்தேச அபிவிருத்தித் திட்டத்தினுள் உள்ளடங்கியுள்ளது.