மஹரகம நகர சபையில் பதற்றம்

Report Print Vethu Vethu in அறிக்கை

மஹரகம நகர சபைக்கு காந்தி கொடிக்கார மற்றும் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிய வருகிறது.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மஹரகம நகர சபையை வெற்றிக்கொண்ட சுயாதீன குழுக்கள் இல 02 உறுப்பினர்கள் ஆறு பேர் பதவி விலகியுள்ளனர்.

அதன்படி , குறித்த பதவி வெற்றிடங்களுக்காக நகர சபையின் முன்னாள் தலைவர் காந்தி கொடிகார உள்ளிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆறு பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.

இதனையடுத்து மஹரகம நகர சபையில் பதற்ற நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.