பிணை முறி மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் விசேட நீதிமன்றில்?

Report Print Kamel Kamel in அறிக்கை

பிணைமுறி மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் விசேட உயர் நீதிமன்றில் மேற்கொள்ளப்படக் கூடிய சாத்தியம் உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இந்த விசேட புதிய நீதிமன்றம் இயங்க உள்ளது.

பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் நோக்கில் மூவர் அடங்கிய விசேட உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்த வழக்கு இந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என சட்ட மா அதிபர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரட்ன மற்றும் சம்பா ஜானகீ ஆகியோர் இந்த விசேட நீதிமன்றின் நீதிபதிகளாக கடமையாற்ற உள்ளனர்.