ஜனாதிபதியும் அனுமதி அளித்தார்! நள்ளிரவில் அதிகரிக்கப்படும் எரிபொருளின் விலைகள்

Report Print Vethu Vethu in அறிக்கை
151Shares

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை அதிகரிக்க ஜனாதிப மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

அதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயிலும், ஒக்டேன் 95 ரக பெற்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயிலும், டீசல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாயிலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்ரோல் ஒரு லீற்றரின் புதிய விலை 145 ரூபாயாகவும், ஒக்டேன் 95 ரக பெற்ரோல் ஒரு லீற்றரின் புதிய விலை155 ரூபாயாகவும், டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 118 ரூபாயாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 129 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அதற்கமைய இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு ஜனாதிபதியினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் பழைய விலையில் விற்பனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.