யாழ். சிறுமி றெஜினா படுகொலை! சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Report Print Ajith Ajith in அறிக்கை

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் ஆறு வயது சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்கள் 3 பேரும் எதிர்வரும் 26ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமி றெஜினா கடந்த ஜூன் மாதம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் 3 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.