யாழ். சிறுமி றெஜினாவுக்காக ஆஜராகிய சுகாஷ்! மூவருக்கு வலைவீச்சு

Report Print Shalini in அறிக்கை

யாழ்ப்பாணம் - சுழிபுரத்தில் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபர்கள் மூவரை கைது செய்யுமாறு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சிறுமி றெஜினா சார்பில் சட்டத்தரணி சுகாஷ் மன்றில் ஆஜராகியிருந்தார்.

கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என சட்டத்தரணி சுகாஷ் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

மேலும் அவர்களை கைது செய்ய வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிடுமாறும் கோரியுள்ளார்.

இதற்கமைய, பிரதான சந்தேகநபர்கள் மூவரை கைது செய்யுமாறு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சிறுமி றெஜினா கொலை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...