இலங்கை தாக்கல் செய்த மனு ஒன்றுக்கு அமெரிக்க நீதிமன்றம் சாதக தீர்ப்பு

Report Print Ajith Ajith in அறிக்கை

இலங்கையின் டயர் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்ட வரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இலங்கைக்கு சார்பான தீர்ப்பை அமெரிக்க நீதிமன்றம்வழங்கியுள்ளது.

இது இலங்கையின் வரலாற்றில் வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றில் கிடைத்த முதல் வெற்றி என்று வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் சோனாலி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை இலங்கையின் வர்த்தக திணைக்களம்,சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்திருந்தது.

இந்தநிலையிலேயே அமெரிக்க வணிக நீதிமன்றம் அதற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் இலங்கையில் இருந்து அதிகளவான இறப்பர் உற்பத்தி பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers