4 வயது தமிழ் சிறுவனை கைது செய்த இலங்கை கடற்படையினர்

Report Print Vethu Vethu in அறிக்கை

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு வயது சிறுவன் மற்றும் 28 வயதான நபர் ஒருவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தலைமன்னார் பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கிளிநொச்சியில் வாழ்ந்த நிலையில், போர் அனர்த்தம் காரணமாக இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கு முன்னர் தலைமன்னாரில் உள்ள இராணுவ தளத்திற்கு இருவரும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.