ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 252 மனித படுகொலை சம்பவங்கள்

Report Print Kamel Kamel in அறிக்கை

இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 252 மனித படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

குடும்ப பிரச்சினைகள், தகாத உறவு, பாதாள உலக செயற்பாடுகள், பழிவாங்குதல், கொள்ளைச் சம்பவங்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டில் 452 மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளதுடன், ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டில் 3368 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் 1503 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டில் 1732 பெண் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Latest Offers