தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை உறுதி

Report Print Ajith Ajith in அறிக்கை

சட்டவிரோத ஆட்கடத்தல்களுக்கு எதிராக இலங்கை தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஆட்கடத்தல் மற்றும் குற்றங்கள் தொடர்பில் இந்தோனேசியாவின் பாலியில் இடம்பெற்ற 7ஆவது அமைச்சர் மட்டக் கூட்டத்தின் போது இலங்கையின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் இலங்கை, சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது சாட்சிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தின் போது உத்தியோகபூர்வமாக தலைவரின் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், படகுகள் மூலம் ஆட்கடத்தல்கள் உட்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சட்டரீதியான கடமைகளை கொண்டிருப்பதை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers