யாழில் 11 வயது சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு நீதிவான் கொடுத்த உத்தரவு

Report Print Shalini in அறிக்கை

யாழ்ப்பாணம் - குடத்தனை பகுதியில் பெற்றோர் பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாத நிலையில், அவர்களின் 11 வயதான மகள் மீது தாக்குதல் மேற்கொண்ட பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பெண்ணை எதிர்வரும் 23ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - குடத்தனை பகுதியில் வீடு கட்டுவதற்காக தம்பதியினர், பெண் ஒருவரிடம் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 இலட்சம் ரூபாயை கடனாக பெற்றுக் கொண்டுள்ளனர்.

இவர்கள் 320,000 ரூபா வட்டி கட்டி வந்துள்ளதுடன், ஒரு வருடமாக வட்டி கட்ட முடியாமல் போய்விட்ட நிலையில் இவர்களுடைய 11 வயது மகள் மீது குறித்த பெண் தாக்குதல் நடத்தியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் பெற்றோர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து தாக்குதல் மேற்கொண்ட பெண் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.