வட மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு ஒக்டோபரில்

Report Print Yathu in அறிக்கை

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்டஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சந்கேநபர்கள் அனைவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 2ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதில் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்க சென்ற போது நீண்ட நேரம் ஆகியும் திணைக்களத்திற்குள் இருந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது இருந்த நிலையில் அலுவலகம் சேதமாக்கப்பட்டது.

இவ்வாறு அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இதில் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உட்பட ஏழு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் குறித்த எட்டு பேரும் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதையடுத்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் வழக்கு இன்றைய தினம் தவணையிடப்பட்டிருந்த நிலையில் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேரும் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்கு இவர்களின் வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.