புலிக்கொடி விவகாரம்! முன்னாள் போராளிகளை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

Report Print Yathu in அறிக்கை

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி உள்ளிட்ட இரண்டு பேரையும் எதிர் வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிபதி ரி.பரஞ்சோதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் குண்டு என்பவற்றுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மொத்தமாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கிளிநொச்சி சாந்தபுரத்தினை சேர்ந்த வெள்ளைச்சாமி சுவந்தீபன், மற்றும் துணுக்காய் பகுதியினை சேர்ந்த தேவராஜ் உதயசீலன் ஆகியோர் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்தும் அதே தினத்தில் கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.