தமிழ் மக்களின் வாடி எரிப்பு! மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Report Print Yathu in அறிக்கை

முல்லைத்தீவு - நாயாற்று பகுதியில் எட்டு வாடிகள் எரியூட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் எட்டு வாடிகள் கடந்த 13 ஆம் திகதி எரியூட்டப்பட்டிருந்தது, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சம்பவ தினத்தன்று இரவு நீர்கொழும்பினை சேர்ந்த மூவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர்களை நேற்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் எரிக்கப்பட்ட பகுதியின் மாதிரிகள் எடுக்கப்பட்டு இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் தீ தானக எரிந்ததா அல்லது தீ வைக்கப்பட்டு எரிந்ததா என்பது தொடர்பான அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் நீதி மன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.டெனிஸ்குமார் உத்தரவிட்டுள்ளார்.