நல்லூர் திருவிழா குறித்து நாமல் தமிழில் வெளியிட்டுள்ள செய்தி

Report Print Shalini in அறிக்கை

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று காலை ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

நல்லைக் கந்தன் ஆலய விளம்பி வருட மஹோற்சவம் கடந்த 2018.08.16 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 25 நாட்கள் திருவிழா நடைபெற்று 25ஆம் நாளான இன்று தேர்த்திருவிழா இடம்பெறுகின்றது.

உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்த அடியார்கள் பெருந்திரளானோர் வருகைதந்து திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது கருத்துக்களை டுவிட்டரில் தமிழ் மொழியில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

“இன்று நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழாவில் கந்தனின் விலைமதிப்பற்ற ஆசிகளை பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

புகழ்பெற்ற இவ்வாலயத்திற்கான எனது சமீபத்திய விஜயம், எமது நாட்டில் நீடிக்கும் உண்மையான சமாதானத்தை எனக்கு உணர்த்தியது. நல்லூர் கந்தனுக்கு அரோகரா!! என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers