இந்தியாவின் முன்னணி தலைவர்களை சந்திக்கும் சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழு

Report Print Ajith Ajith in அறிக்கை

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள இலங்கையின் சபநாயகர் தலைமையிலான குழுவினர் இன்று இந்தியாவின் முன்னணி தலைவர்களை சந்திக்கின்றதாக தெரியவருகிறது.

மூன்று நாள் பயணத்தில் இந்தியா சென்றுள்ள குறித்த குழு இன்று பிரதமர் மோடி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.

இந்தியா சென்றுள்ள குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உட்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers