இலங்கை மீது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள ஐ.நாவின் புதிய ஆணையாளர்

Report Print Shalini in அறிக்கை

இலங்கையில், இடைக்கால நீதித்துறையின் அர்த்தமுள்ள நடைமுறைகளை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் மெதுவாக நகர்வதாக புதிய ஐ.நா உயர் ஆணையாளர் மைக்கேல் பெசேல்ட் (Michelle Bachelet) தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 39 வது அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில், இடைக்கால நீதித்துறையின் அர்த்தமுள்ள நடைமுறைகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் மிக மெதுவாக நகர்வதுடன், காணாமற் போனோர் அலுவலகம் இப்போதுதான் அதன் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

விரைவாக செயல்பட அந்த அலுவலகத்திற்கு நாங்கள் கூறுகின்றோம். காணாமல் போனவர்களுக்கான பதில்களை வழங்க வேண்டும்.

பொறுப்புணர்வு மற்றும் சத்தியத்தேடும் நாடுகளின் நீண்ட கால ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் பெரும் எடையை கொண்டிருக்க முடியும்.

இனவாதத்தின் தொடர்ச்சியான சம்பவங்களால் நாடு தொடர்ச்சியாக குழப்பமடைவதை காணக்கூடியதாக உள்ளது. என புதிய ஐ.நா உயர் ஆணையாளர் மைக்கேல் பெசேல்ட் (Michelle Bachelet) தெரிவித்துள்ளார்.

Latest Offers