தவறிய அழைப்பால் இராணுவ சிப்பாயின் மோசமான செயல்!

Report Print Vethu Vethu in அறிக்கை

அனுராதபுரத்தில் தவறிய அழைப்பால் ஏற்பட்ட காதலால் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறிய அழைப்பினால் 15 வயதான சிறுமி ஒருவருடன் இராணுவ வீரர் ஒருவர் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

அனுராதபுரம் கலேன்பிந்துவெவ பிரதேசத்தில் இருந்து மொனராகலைக்கு சென்ற இராணுவ வீரர் குறித்த சிறுமியை அழைத்துச் செல்லும் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 27 வயதான இராணுவ வீரர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோருக்கு தெரியாமல், சிறுமி வீட்டில் இருந்து இராணுவ வீரர் உட்பட 3 பேருடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமி இராணுவ வீரரினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அதற்கு அடுத்த நாள் சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார். எனினும் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதற்கமைய சந்தேக நபரான இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் திருமணமானவர் என தெரியவந்துள்ளது.

Latest Offers