தமிழ் அரசியல் கைதிகளின் உயிரை அரசு காப்பாற்ற வேண்டும்

Report Print Sumi in அறிக்கை

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றி, அவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் எனச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வெள்ளிக்கிழமையில் முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஒன்பது வருடங்களுக்கு மேல் முறையான விசாரணையோ அல்லது விடுதலையோ இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் மனிதர்களே.

அவர்களும் அன்பான குடும்பத்துடனும் பாசமான பிள்ளைகள், உறவினர்கள், சுற்றத்தாருடனும் மகிழ்வாக வாழப் பிறந்த இந்த நாட்டின் பிரஜைகளே என்பதை அனைவரும் உணர வேண்டும்.

வேறு எந்தவொரு வழியுமற்ற நிலையில் மீண்டும் மீண்டும் அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்கின்ற உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும்.

அத்துடன், அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற வகையில் உடனடியாக விடுவிக்குமாறும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்ள கோரியும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நாம், அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டு வாழ்வுரிமை மறுகப்படும் சமூக அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும்.

இதேவேளை, இன, மத, மொழி பிரதேச எல்லைகளைத் தாண்டி மனிதாபிமானமுள்ள அனைவரையும் அணிதிரளுமாறும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அறிக்கையின் மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.

Latest Offers

loading...