ஜனாதிபதி மைத்திரி வெளிப்படுத்திய ரகசியம்! சர்வதேச ஊடகங்களில் வெளியானமையால் சர்ச்சை

Report Print Vethu Vethu in அறிக்கை

இலங்கையின் தேசிய விமான சேவையில் வழங்கப்படும் உணவு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச ரீதியாக சென்றடைந்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையினால் தனக்கு வழங்கப்பட்ட முந்திரி பருப்பு மனித பாவனைக்கு உகந்தது அல்ல. அதனை நாய்க்கு கூட உணவாக வழங்க முடியாதென ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் வாத, பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி கருத்து தொடர்பில் சர்வதேச ஊடகங்களும் கவனம் செலுத்தியுள்ளன.

ஜனாதிபதியின் எச்சரிக்கையை அடுத்து ஸ்ரீலங்கன் விமான சேவையில், பயணிகளுக்காக முந்திரி பருப்பு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கருத்து உலக செய்தி சேவையான பிபிசி முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசி தொலைக்காட்சியில் இந்த விவகாரம் தலைப்பு செய்தியாக வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஸ்ரீலங்கன் விமான சேவை பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச ரீதியாக அதன் பெயருக்கு தற்போது ஏற்பட்ட அவப்பெயர் பாரியதொரு விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.