நீங்கள் தவறுகள் செய்யாவிட்டால் உங்களுக்கு விடுதலை கிடைக்கும்: திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான்

Report Print Abdulsalam Yaseem in அறிக்கை

திருகோணமலை, நெல்சன் புறப்பகுதியில் 30 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அக்டோபர் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் குறித்த சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபர், “தான் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை எனவும் தம்மிடம் எதுவும் கைப்பற்றப்படவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகநபரின் கருத்துக்கு மதிப்பளித்த நீதவான், “உண்மைக்கு அழிவில்லை எனவும் நீங்கள் அப்படியான தவறுகள் செய்யாவிட்டால் உங்களுக்கு விடுதலை கிடைக்கும்” எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் அக்டோபர் மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் கட்டளை பிறப்பித்தார்.