மைத்திரி - கோத்தாவை கொலை செய்ய திட்டம்? சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் ஆவணம்

Report Print Ajith Ajith in அறிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் கொலை செய்ய திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபரான பொலிஸ் அதிகாரியின் தொலைபேசி உரையாடல் அங்கிய ஒலிப்பதிவு ஆவணம் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து விசாரணைகள் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில் குறித்த ஆவணத்தை சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பதற்கான அனுமதியை பொலிஸ் விசாரணையாளர்கள் நீதிமன்றத்திடம் கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா தன்னுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்த குரல் பதிவினை, ஊழல் ஒழிப்பு படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார கடந்த 12ஆம் திகதி ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.

இந்த உரையாடலில் குறித்த கொலைத்திட்டம் தொடர்பில் தகவல்கள் பரிமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers