இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி! எடுக்கப்பட்டுள்ள முடிவு

Report Print Ajith Ajith in அறிக்கை

இலங்கையின் ரூபாவில் ஏற்பட்டுள்ள பெறுமதி வீழ்ச்சியை நிவர்த்தி செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை நேற்று புத்தளம், நாத்தாண்டியா பகுதியில் வைத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் ரூபா மாத்திரமல்ல, ஸ்ரேலிங் பவுண், யூரோ போன்றவற்றிலும் இன்று வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் வருடத்தில் மாத்திரம் இலங்கை, வெளிநாட்டு கடனாக 400 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது என்றும் ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers