தென்கிழக்கு அராபியக் கடலில் உருவாகியள்ள தாழமுக்கம்! இலங்கையை பாதிக்குமா?

Report Print Rusath in அறிக்கை

தென்கிழக்கு அராபியக் கடலில் உருவாகியுள்ள தாழமுக்கமானது இலங்கையை விட்டு நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலைய பெறுப்பதிகாரி கே.சூரியகுமார் இன்று மேலும் கூறுகையில்,

கடந்த சில நாட்களாக இலங்கையில் நிலவி வந்த மழை கொண்ட காலநிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் அனேகமான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.

தெற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சிக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதோடு,

கிழக்கு வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சிக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த இடியுடன் கூடிய மழை காலத்தில் காற்றும் சற்றுப் பலமாக வீசும். எனவே பொது மக்கள் இடி மின்னல் தாக்கத்திலிருந்து வரும் சேதங்களிலிருந்த குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை கடற் பிராந்தியங்களை பெறுத்தவரையில் தென்கிழக்கு அராபியக் கடலில் உருவாகியுள்ள தாழமுக்கமானது தங்போது இலங்கையிலிருந்து 1500 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் காணப்படுகின்றது.

இது அடுத்துவரும் 24 மணித்தியாலத்தில் சூறாவளியாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு சூறாவளியாக உருவாகும் பட்சத்தில் ஓமான் நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட லுவான் என்ற பெயர் அதற்கு சூட்டப்படும். இது தற்போது வடமேற்கு திசையில் இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இதன் காரணத்தினால் மன்னார் முதல், புத்தளம், கொழும்பு, காலி ஊடான ஹம்பாந்தோட்டை முலான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் 70 கிலோமீற்றர் முதல் 80 கிலோமீற்றர் வரை வீசுவதனால் அந்தக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers