சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 2,200 முறைப்பாடுகள்

Report Print Steephen Steephen in அறிக்கை

சமூக வலைத்தளங்கள் சம்பந்தமாக இந்த வருடத்தின் முடிவடைந்துள்ள இதுவரையான காலப்பகுதியில் 2,200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கணனி அவசர பதில் அமைப்பின் சிரேஷ்ட தகவல் தொழிநுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

வேறு ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள போலி முகநூல் பக்கங்கள் தொடர்பாகவே அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனால், சமூக வலைத்தள கணக்குகளில் அறிந்தவர்களை மட்டுமே இணைத்துக் கொள்ளுமாறும் ரொஷான் சந்திரகுப்த மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் முகநூல் மூலம் நிதி மோசடி செய்தமை, பாலியல் சம்பந்தமான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers