ஜனாதிபதியை கொலை செய்ய சதி! நாலக, நாமலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

Report Print Shalini in அறிக்கை

ஊழலுக்கு எதிரான படையணியன் பணிப்பாளர் நாமல் குமார மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா ஆகியோருக்கு வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்று இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட அரச தலைவர்களை கொலை செய்வதற்கான சூழ்ச்சி இருப்பதாக நாமல் குமாரவால் வெளியிடப்பட்ட தொலைபேசி உரையாடலில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா பேசியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குறித்த இருவரையும் இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் வெள்ளிக்கிழமை உத்தவிட்டிருந்தார்.

இதையடுத்தே குறித்த இருவருக்கும் வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த தொலைபேசி உரையாடலில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு தொடர்பு உண்டு என்பது உறுதியாகியுள்ளது என வார இறுதி ஊடகமொன்று அரசாங்கத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers