நாளாந்தம் விசாரணைக்கு வருகின்றது கோத்தபாயவின் வழக்கு

Report Print Gokulan Gokulan in அறிக்கை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மீதான நிதி மோசடி வழக்கை நாளாந்தம் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

டி.ஏ ராஜபக்ஸ நினைவு அருங்காட்சியக நிர்மாணத்தின் போது, 33 மில்லியன் ரூபாய் நிதியினை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் குறித்த வழக்கை நாளாந்தம் விசாரணை நடாத்துவதற்கு மன்று உத்தரவிட்டுள்ளது.

மெதமுல டி.ஏ.ராஜபக்ஸ அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கோத்தபாய உட்பட 7 பேர் மீது கடந்த 24ஆம் திகதி சட்டமா அதிபரினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Latest Offers