பொலிஸ்மா அதிபரின் விடுமுறை கோரிக்கை நிராகரிப்பு

Report Print Steephen Steephen in அறிக்கை

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் விடுமுறைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சிடம் பொலிஸ்மா அதிபர் விடுமுறை கோரி விண்ணப்பம் செய்திருந்தார்.

ஐந்து நாட்கள் விடுமுறை வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் எழுத்து மூலம் கோரியிருந்த போதிலும், அமைச்சு இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதி அளவில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பதவியை இராஜினாமா செய்வார் என உத்தியோகப் பற்றற்ற பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers