மீண்டும் அதிகரிக்கும் எரிபொருட்களின் விலை?

Report Print Ajith Ajith in அறிக்கை

எரிபொருட்களின் விலை மீளாய்வு இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருட்களின் விலை மாதாந்தம் மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

உலக சந்தையில் நிலவும் எரிபொருட்களின் விலை நிலவரத்திற்கு அமைய இலங்கையில் எரிபொருட்களின் விலையை தீர்மானிப்பதற்காக மாதாந்தம் இந்த எரிபொருள் விலை மீளாய்வு இடம்பெறுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலக சந்தையின் தற்போதைய நிலவரப்படி, டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் எரிபொருட்களின் கேள்வி என்பனவற்றின் அடிப்படையில் இன்றைய தினமும் எரிபொருட்களின் விலை அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மாதத்தின் பின்னர் எரிபொருட்களின் விலைகள் நான்கு தடவைகள் அதிகரித்துள்ளன. மே, ஜுலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இந்த விலைகளின் அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 95 ஒக்டெய்ன் பெற்றோலின் லீந்நர் ஒன்றின் விலை 148 ரூபாவிலிருந்து 161 ரூபாவாகவும், 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 137 ரூபாவிலிருந்து 149 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 109 ரூபாவிலிருந்து 129 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 109 ரூபாவிலிருந்து 133 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Latest Offers