துமிந்த சில்வாவின் மேன்முறையீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று

Report Print Kamel Kamel in அறிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீடு குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட 4 பேரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து குற்றமற்றவர்கள் என அறிவிக்குமாறு துமிந்த சில்வா உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தனர்.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர்களான புவனெக்க அலுவிஹார, நலீன் பெரேரா, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலலேகொட ஆகியோரினால் விசாரணை செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

சந்தேகமின்றி ஆதாரங்கள் நிரூபிக்கப்படாத நிலையில் தமக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றின் நீதிபதிகளில் பெரும்பான்மையானவர்கள் சாட்சி விசாரணைகளை சரியாக கருத்தில் கொள்ளாது மரண தண்டனை விதித்துள்ளதாக மேலும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Latest Offers