துமிந்த சில்வாவின் மரண தண்டனை! மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Report Print Kamel Kamel in அறிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட 4 பேரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் துமிந்த சில்வா உள்ளிட்ட சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உயர் நீதிமன்றினால் வழங்கப்பட்டிருந்த இந்த தீர்ப்பிற்கு எதிராக துமிந்த தரப்பினர் மேன்முறையீடு செய்திருந்தனர்.

எனினும் இந்த மரண தண்டனையை உறுதி செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் 4 நீதியரசர்களினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி முல்லேரியா பிரதேசத்தில் வைத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் அடிப்படையில் கடந்த 2016ஆம் ஆண்டில் துமிந்த சில்வா உள்ளிட்ட நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

இதில் துமிந்த உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Latest Offers