இலங்கையில் விற்பனை செய்யப்படும் விஷம் கலந்த அரிசி! வெளியானது அதிர்சித் தகவல்

Report Print Vethu Vethu in அறிக்கை

இலங்கையில் விற்பனை செய்யப்படும் அரிசி தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒரு வகையான நிறமூட்டிய அரிசி விற்பனை செய்யப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிவப்பு அரிசிக்கு பதிலாக நிறமூட்டிய அரிசி விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

சிவப்பு நிறத்தில் அரசி காணப்பட்டால் அல்லது விரலில் நிறங்கள் ஒட்டும் வகையில் இருந்தால் அது குறித்து தகவல் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளர்.