இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! வெளிநாடு ஒன்று வழங்கும் ஐந்து வருட வீசா

Report Print Vethu Vethu in அறிக்கை
3950Shares

இலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது.

இஸ்ரேலில் விவசாய தொழிலில் ஈடுபடுவதற்காக இலங்கையர்களுக்கு 5 வருட வீசா வழங்குவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச குடியேற்ற நிறுவனத்தின் தலையீட்டிற்கமைய கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டில் உரிய வீசா காலத்தை கடந்து 500 இலங்கையர்கள் இஸ்ரேலில் தங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார உட்பட இந்த நாட்டு பிரதிநிதிகள் சிலர் அந்த நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய வீசா காலம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் இலங்கையர்களுக்கு விவசாய தொழில் துறையில் தொழில் வழங்குவதற்கு இஸ்ரேல் அதிகாரிகள் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.