கொழும்பில் பிரபல பாடசாலையில் மாணவர்கள் வெறியாட்டம்! தாய், தந்தை மீது கடும் தாக்குதல்

Report Print Vethu Vethu in அறிக்கை
448Shares

கொழும்பில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் அலுவலகத்தில் மாணவர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலில் மாணவன் மற்றும் அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையின் உயர்தர கலை பிரிவு மாணவன் மற்றும் அவரது தந்தையே தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர்.

பாடசாலை மாணவ தலைவர்கள் பல முறை இந்த மாணவனை தாக்கியுள்ள நிலையில், இந்த மாணவன் தனது பெற்றோருடன் அதிபரை சந்திப்பதற்கு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு மாணவர்கள் சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், மகன் தாக்கப்படுவதனை தடுக்க முயற்சித்த தாய் மற்றும் தந்தையும் மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அதிபர் பாடசாலையில் இல்லாத நிலையில், அதிபர் வரும் வரை அலுவலகத்தில் காத்திருந்த போதே மாவணர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த மாணவனின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அனைத்து மாணவர்களை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.