கொழும்பில் 130 பேரை காணவில்லை

Report Print Steephen Steephen in அறிக்கை

கொழும்பில் வசித்து வந்த 130 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான செயலகம் தெரிவித்துள்ளது.

1983ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலத்தில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 1989ஆம் ஆண்டே அதிகளவானோர் காணாமல் போயுள்ளதாகவும் செயலகம் கூறியுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான செயலகம் மேல் மாகாணத்தில் காணாமல்போனோரின் குடும்பத்தினருடன் நேற்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.

மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான செயலகம் கடந்த மே மாதம் மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.