நேவி சம்பத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in அறிக்கை

கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நேவி சம்பத் என்ற லெப்டினட் கமாண்டார் சந்தன பிரசாத் ஹெட்டியராச்சியை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று கோட்டை பதில் நீதவான் ஜயந்த டயஸ் நாணயக்கார முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2008 - 2009ஆம் ஆண்டு வரையில் கொழும்பை சேர்ந்த 11 இளைஞர்களை கடத்தி சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் நேவி சம்பத் கடந்த மாதம் 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

தலைமறைவாக இருந்து வந்த இவர், கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவரால் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கப்பம் கோரும் நோக்கில் 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...