உலக பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் வெளியானது! இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Report Print Murali Murali in அறிக்கை

உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டு பட்டியலில் இலங்கை 85வது இடத்தை பிடித்துள்ளது.

உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 2018ம் ஆண்டுக்கான உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு பட்டியலை வெளியாகியுள்ளது.

140 நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ள அந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், சிங்கப்பூர் 2ம் இடத்திலும், ஜெர்மனி 3ம் இடத்திலும், சுவிட்ஸர்லாந்து நான்காவது இடத்திலும் இருக்கின்றன.

இந்த பட்டியலில் சீனா 28வது இடத்தை பிடித்துள்ள நிலையில், இந்தியா 58வது இடத்தில் இருக்கின்றது. இது குறித்து உலக பொருளாதார அமைப்பு கூறுகையில்,

உயர்மட்ட மற்றும் கீழ் - நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் முன்னேற்றி வருகின்றன.

சீனா ஏற்கெனவே ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான முதலீடுகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியா இதில் அதிகமாக பின் தங்கவில்லை.

பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரங்களில், சீனா 72.6 புள்ளிகளுடன் 28வது இடத்திலும், ரஷ்யா 65.6 புள்ளிகளுடன் 43வது இடத்திலும், இந்தியா 62 புள்ளிகளுடன் 58வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 60.8 புள்ளிகளுடன் 67வது இடத்திலும், பிரேசில் 59.5 புள்ளிகளுடன் 72வது இடத்தையும் பெற்று உள்ளது.

ஆயினும், "தெற்காசியாவின் முக்கிய உந்து சக்தியாக இந்தியா இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் மிகவும் திறமையான உள்கட்டமைப்பு முறையை நம்பியுள்ளன.

போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் இந்தியா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. இலங்கை மிக நவீன பயன்பாட்டு உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்து உள்ளது.

முழுமையான பட்டியலை படிக்க இங்கே அழுத்தவும்..

Latest Offers