அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு கிடைத்த மகிழ்ச்சி

Report Print Ajith Ajith in அறிக்கை

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையரான மொஹமட் கமர் நிலர் நிஜாம்டின், மீதான பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை வழக்கு தொடுநர்கள் மீளப்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், சட்ட செலவுகளுக்கான இழப்பீடுகளை அவர் தரப்பில் கோரியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சிட்னி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் குறித்த இலங்கை பிரஜை, அவுஸ்திரேலியாவில் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாகவும், குறிப்பாக முன்னாள் பிரதமர் மெல்கம் டேன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷொப் ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் கடந்த மாதம் 28ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, குறித்த குற்றச்சாட்டிலிருந்து அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கை மாணவரின் சட்ட செலவுகளுக்கான இழப்பீடுகளுக்காக அவரது சட்டத்தரணியினால் நீதிமன்றில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பம் எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Latest Offers