இலங்கை இராணுவ அதிகாரியின் நிலை குறித்து கவலை வெளியிட்ட ஜனாதிபதி

Report Print Shalini in அறிக்கை

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இலங்கை இராணுவ கட்டளை அதிகாரியான லெப்.கேணல் கலன அமுனுபுரவை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விடயத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பங்கு குறித்து கேள்வி எழுப்ப வேண்டியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

யஸ்மின் சூகாவின் நடவடிக்கையாலேயே லெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அனுப்புவதற்கு காரணமாக அமைந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.