கண்டி கலவரத்தின் சூத்திரதாரி வெளியில் வந்தார்

Report Print Kamel Kamel in அறிக்கை

கண்டி - திகன கலவரங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அமீத் வீரசிங்க என்பவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அமீத் வீரசிங்க மஹாசோன பலகாய என்னும் அமைப்பின் முக்கியஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீத் வீரசிங்கவின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்வைத்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு கண்டி உயர் நீதிமன்றம் இன்று அமீத் வீரசிங்கவிற்கு பிணை வழங்கியுள்ளது.

கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய வன்முறைகள் வெடித்து உயிர்கள் காவு கொள்ளப்பட்டமையுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக அமீத் வீரசிங்க கருதப்படுகின்றார்.

இந்த நிலையில் ஆட்சி மாற்றத்துடன் அமீத் வீரசிங்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.