வீரவங்சவின் வழக்கில் இருந்து ஒதுங்கிக்கொண்ட நீதிபதி

Report Print Steephen Steephen in அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கை தான் விசாரிப்பது பொருத்தமற்றது என கூறியுள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாராச்சி, அந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யாந்துடுவவுக்கு பரிந்துரைத்துள்ளார்.

வீரவங்ச அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தனது சொத்துக்கள் மற்றும் வருமானத்தில் சம்பாதிக்க முடியாத, அளவிலான 75 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை சம்பாதித்தமை தொடர்பான வழக்கையே வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரப்பட்டுள்ளது.

விக்கும் களுவாராச்சி பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றியதால், தான் இந்த வழக்கை விசாரிப்பது பொருத்தமற்றது என கூறி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளார்.

இதனை கவனத்தில் எடுத்து கொண்ட நீதிபதி ஹெய்யந்துடுவ வழக்கை நீதிபதி சசி மகேந்திரனுக்கு மாற்றியுள்ளார்.

Latest Offers