கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

Report Print Steephen Steephen in அறிக்கை

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ரியர் அத்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தனவை அடுத்த வழக்கு விசாரணைக்கு முன்னர் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

11 இளைஞர்களை கடத்தி சென்று காணாமல் ஆக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படை அதிகாரியான நேவி சம்பத் என்ற லெப்டினட் கமாண்டார் சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி தலைமறைவாக உதவியதாக ரவிந்திர விஜேகுணவர்தனவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரியர் அத்மிரலை கைது செய்ய போதிய சாட்சியங்கள் இருக்கும் நிலையில், அவரை ஏன் கைது செய்யவில்லை என நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரை கைது செய்வது தொடர்பில் தமக்கு சில அழுத்தங்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

இதனை கவனத்தில் எடுத்து கொண்ட நீதவான் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் ரவிந்திர விஜேகுணவர்தனவை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers