வழக்கு தவணைகளுக்கு சமூகமளிக்காதிருந்தவர் விளக்கமறியலில்

Report Print Mubarak in அறிக்கை

திருகோணமலையில் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமரைவாகியிருந்த நபர் ஒருவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த நபரை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போது நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டு சாராய போத்தல் 3 வைத்திருந்தமை தொடர்பான வழக்கு கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கு தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமரைவாகியிருந்த நிலையிலே பொலிஸார் கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திள்ளனர்.

அக்போபுர பகுதியைச்சேர்ந்த 35 வயதுடையவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Latest Offers