புலிகளின் முக்கியஸ்தருக்கு இரங்கல் ஊர்வலம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Report Print Sujitha Sri in அறிக்கை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் வைகோ, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட சுமார் 262 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைள் தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு சென்னை உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வழக்கு ரத்து செய்யப்படுவதாக அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாம் திகதி இலங்கை இராணுவத்தினரின் வான் படை தாக்குதலுக்கு இலக்காகி உயிர்நீத்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆதரவாளர்களை திரட்டி, உயிர்நீத்த சுப.தமிழ்ச்செல்வனுக்காக இரங்கல் ஊர்வலம் நடத்தியதாக வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட சுமார் 262 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.