வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய மகிழ்ச்சியான தீர்ப்பு

Report Print Shalini in அறிக்கை

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு, பொலிஸாரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பூபாலசிங்கம் இந்திரகுமார் என்பவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது சட்ட மா அதிபர் திணைக்கள அரச சட்டவாளர் மன்றில் முன்னிலையாகி பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான வழக்கை மீளப்பெறுவதாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அதனால் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் பூபாலசிங்கம் இந்திரகுமார் இன்று விடுவிக்கப்பட்டார்.