ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ள கூட்டமைப்பின் முக்கியஸ்தர்!

Report Print Dias Dias in அறிக்கை

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த கடிதத்தில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இந்த கொலை சம்பவம் தொடர்பில் மிகவும் கவலையடைகின்றேன். எனினும், இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளமையால் வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய முன்னாள் போராளிகள் அச்சத்தில் வாழ்கின்றனர்.

இந்நிலையில், உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் இடம்பெறுவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என சந்தேகிக்கின்றேன்.

தற்போது க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறுவதனால் மாணவர்களையும் இந்த விடயம் பாதிக்கக் கூடும்.

ஆகையினால் மேற்கூறிய விடயங்களை கருத்திற்கொண்டு உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும்” என அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த இந்த கடிதத்தின் பிரதியொன்று பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.